பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா…

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு பிறகு பெட்ரோல், டீசலின் விலையில் தினசரி மாற்றத்தை காணமுடிகிறது. இந்த விலை மாற்றமானது சாமானிய மக்களின் வாழ்வில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 100-ஐ தாண்டியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, வருகிற 8ம் தேதியிலிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். முதற்கட்டமாக பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் கூறினார். மேலும் வரும் 12ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தவுள்ளதாகவும் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.