காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் எம்.பி செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளார். மேலும், அவரது தாயையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘உங்கள் ஸ்மார்ட்போனை பராமரிப்பது இவ்வளவு சுலபமா? இது தெரியாமல் போச்சே!’
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் பயணம் செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், செப்டம்பர் 4, 2022 அன்று டெல்லியில் நடைபெறும் காங்கிரஸின் மெஹங்காய் பர் ஹல்லா போல் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Jairam_Ramesh/status/1562143386471383040








