ராகுல் காந்தி தகுதிநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பட்டம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் நடை பெற்ற…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் நடை பெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு, கலை பிரிவு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை வகித்தார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் கலந்து கொண்டு
மத்திய அரசை கண்டித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

——-ம. ஶ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.