முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்த  புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. இதுதொடர்பான அரசின் புகார் காரணமாக ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அதனை மீட்க உரிய செயல்முறைகளை மேற்கொள்கிறோம், அதுவரை மற்ற சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்து மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி தற்காலிகமாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் சமூக வலைதள பக்கம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களின் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. இதுபோலவே காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர், ரந்தீப் சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், சுஷ்மிதா தே உள்ளிட்ட தலைவர்களின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவர் ரோகன் குப்தா கூறுகையில், என்ன செய்தாலும் காங்கிரஸ் மக்களுக்காக குரல் கொடுப்பதை தடுக்க முடியாது. அரசின் அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் 5,000 மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன எனக் குற்றம்சாட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சிகளோடு கூட்டணி இல்லை – கமல் திட்டவட்டம்

Halley Karthik

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

Ezhilarasan

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு

Halley Karthik