தமிழகத்தின் ஆன்மாவான திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளதாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருக்குறளை பிரதமர் மோடி பிரித்துக்கூட பார்த்திருக்க மாட்டார் என விமர்சித்தார். மேலும், தமிழ் மொழி தனக்கென தனி வரலாற்றைக் கொண்டுள்ள நிலையில், என்ன தைரியத்தில் ஒரே மொழி, ஒரே வரலாறு, என பிரதமர் மோடி பேசுகிறார் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசை ரிமோட் கண்ரோல் மூலம் கட்டுப்படுத்துவதுபோல, தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது, என ராகுல் பேசினார். மேலும் ஆறு தொழிலதிபர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் மட்டுமே மோடி உழைப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தின் உணர்வுகளை புரித்து கொண்டால், மக்கள் இரண்டு மடங்காக அன்பு செலுத்துவார்கள் என்பதை தனது அனுபவத்தில் தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.







