இந்திய ரயில்வேத்துறை கடந்த 21ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையில், Senior Resident பதவிக்கான ஆட்கள் தேவை என வட மாநில ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது. காலி பணியிடங்களுக்கான நேர்காணல் வரும் 28 மற்றும் 29 தேதிகளில் தெற்கு மும்பை, பைக்குலாவில் உள்ள சென்டரல் ஹாஸ்பிட்டல் ஆடிடோரியத்தில் நடைப்பெற உள்ளது, ஆர்வம் உள்ளவர்கள் நேரடி நேர்காணலில் நேரடியாக வந்து பங்குபெறலாம் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.

நுண்ணுயிரியல், கண் மருத்துவம், புற்றுநோயியல்,எ லும்பியல், குழந்தை மருத்துவம், காது – மூக்கு – தொண்டை நிபுணர், மகப்பேறு மருத்துவர், நோயியல் நிபுணர், ரேடியாலஜி நிபுணர், அறுவை சிகிச்சை வல்லுநர் போன்ற பல துறைகளுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக மேலே குறிபிடப்பட்டுள்ள பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் பெற்றிருக்கும் பட்டம் இந்திய மெடிகல் கவுன்சிலால் அங்கீகரிக்கபட்டிருக்க வேண்டும். மேலும், ஏழாவது ஊதிய குழுவின் அடிபடையில் ரூ 67,700 முதல் ரூ. 2,08,700 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான
வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 37 வயதும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 40 வயதும், பட்டியலின பிரிவினருக்கு 42 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.







