முக்கியச் செய்திகள் இந்தியா

புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்,  புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி (democratic azad party) என பெயர் சூட்டியுள்ளார்.

மூத்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவரான குலாம் நபி ஆசாத் 22 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 8ந்தேதி முதல் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்துவந்த குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு பிப்ரவரி  15ந்தேதி ஓய்வு பெற்றார்.  ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த முறை குலாம் நபி ஆசாத்துக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவும் குலாம் நபி ஆசாத்திற்கு காங்கிரஸ் தலைமை மீதும்,  ராகுல்காந்தி மீதும் வெறுப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார் குலாம் நபி ஆசாத்.

1973ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர்  முதலமைச்சர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென போர்க்கொடி உயர்த்திய ஜி – 23 அதிருப்தி தலைவர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வந்தார்.

இந்நிலையில், காங்கிரஸை விட்டு விலகிய நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உபியில் காதலை கைவிட மறுத்ததால் பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்த பெற்றோர்..

Dhamotharan

நிதியமைச்சர் பி.டி.ஆரை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

G SaravanaKumar

ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

G SaravanaKumar