மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கூட்டணி: பாஜகவிற்கு பாதிப்பு இல்லை – பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தாலும், பாஜகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது, என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தேசிய தலைவர் வேதாந்தம் பிறந்த…

மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தாலும், பாஜகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது, என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தேசிய தலைவர் வேதாந்தம் பிறந்த நாள் விழா காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதி மணி மண்டபத்தில் நடைபெற்றது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனாதன இந்து தர்மத்தை வேரறுக்க என்ற வார்த்தையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதால் தான், தோல்வி அடைந்துள்ளதாகவும், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்[ஜியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் மாற்றம் வரப்போவதில்லை எனக்கூறினார்.

அண்மைச் செய்தி: சொத்துத் தகராறு – தந்தையை கொளுத்திய மகன்

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடுகுபட்டு கிராமத்தில் சகோதரி பானுமதி நினைவு மண்டபம் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிததார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பதே பாஜகவின் வெற்றிக்கு வழிவகை செய்ததாகவும், தற்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற மம்தா பானர்ஜி தயார் எனக்கூறியுள்ளதற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.