“பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்” – தவெக தலைவர் விஜய்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதவுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபடவுள்ளனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு முதல் தோ்வாக தமிழ் பாடத்துக்கான தோ்வு இன்று தொடங்குகிறது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.

உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!

நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.