சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், அதனை பாராட்டியுள்ளார்.
இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். வெவ்வேறு காலகட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறையை மிகவும் நேர்த்தியாக இத்திரைப்படம் வெளிப்படுத்தியிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி கொள்ளும் சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி ஆகிய மூவரின் கதாபாத்திரங்கள் மிகவும் யதார்த்தமாக கையாண்டு அவர்களின் வலிகளை, அதனை எதிர்கொண்டு அவர்கள் முன்னேறுகிற விதம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இத்திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “இயக்குனர் கே.பாலச்சந்தரால் உருவாக்கப்பட்டஇயக்குனர்களில் வசந்த் மிக முக்கியமானவர். பாலச்சந்தர் சாருக்கு மிகவும் பிடித்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள். அவர் இயக்கியுள்ள சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே மிகவும் அருமையான படம் என்று சொன்னால் அது மிகை அல்ல” என்று பாராட்டியுள்ளார்.
மேலும், “பாரதி கண்ட புதுமை பெண்களான மூன்று பெண் கதாபாத்திரங்களை வைத்து மூன்று கதைகளாக்கி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இதை பார்த்தவர்கள் அனைவரும் இந்த படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பிறகு அந்த மூன்று கதாபாத்திரங்களும் நம் நெஞ்சை விட்டு அகலாது.இது போன்ற அருமையான படத்தை அளித்த வசந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.