காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் 16,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,018 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1,19,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகள்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி.ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொற்று குணமடைந்து ஓய்வு எடுத்ததையடுத்து அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








