மதுபோதையில் ரவுடிகள் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரவுடியை அவரது கூட்டாளிகளே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரவுடியை அவரது கூட்டாளிகளே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் அருகே பாஸ்கர் தனது கூட்டாளிகளுடன் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது கூட்டாளிகளான ஜெகன், கார்த்திக் ஆகியோர் பாஸ்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். தகவலறிந்து சென்ற சிப்காட் காவல் நிலைய போலீசார், படுகாயம் அடைந்த பாஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தப்பியோடிய ஜெகன், கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.