ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடவுள்ளனர்.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க ஆட்டக்கார்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி சென்னை பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர். தொடர்து விளையாடிய டெல்லி அணி இறுதியாக 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
இதனையடுத்து, 13ம் தேதி நடைப்பெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடினர். டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மயங்க் அகர்வால் 14 ரன்னில் வெளியேறினார். இதனைதொடர்து ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று பின்னர் 91 ரன்கள் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. இந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
மேலும் இன்றைய ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அவர்களுது முதல் வெற்றியை பதிவு செய்ய இது முக்கியமான போட்டியாக இருக்கும். மேலும் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா என்பது இன்றய ஆட்ட முடிவில் தெரியும்.







