பாலியல் வழக்கில் கைதான தனியார் கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி விடுதியில் தங்கி பயின்றுவந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் கைது செய்யப்பட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் மீது, 3 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் நீதிமன்ற வாயிலில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.