நிறைவடைந்தது சர்வதேச புத்தக கண்காட்சி; முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்

சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவடைவதையொட்டி முக்கிய ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகள் சர்வதேச புத்தகக்…

சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவடைவதையொட்டி முக்கிய ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகள் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று நிறைவடைவதையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விழாவில் பங்கேற்றார். அத்துடன், இந்த விழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு பாடநூல் கழகம் தமிழில் மொழி பெயர்த்த மருத்துவ புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார்.

மேலும், தமிழ் மொழியிலிருந்து பிரெஞ்சு பெங்காலி மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.

அத்துடன், முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதோடு, தமிழ் மற்றும் வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் இடையே பதிப்புரிமை பரிமாறிக் கொள்ளப்பட்டத்து. இதன்மூலம், தமிழ் மொழி மற்ற மொழிக்கும், பல்வேறு மொழிகளில் உள்ள புத்தகங்களைத் தமிழிற்குக் கொண்டுவரவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர். தமிழக எழுத்தாளர் கிருஷ்ணகுமார் இமயம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், வெண்ணிலா, முருகேசன், நிவேதா லூயிஸ் போன்றவர்களின் படைப்புகள் மொழிபெயர்க்க இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.