பாஜக பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, Flying kiss கொடுத்ததாக மக்களவை சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த அநீதி குறித்து மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில், விவாதத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்று இன்று உரையாற்றினார். மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசிய ராகுல் காந்தி, தனது உரை முடிந்தவுடன் ராஜஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவசரமாக அவையை விட்டு வெளியேறினார்.
அப்போது பாஜக பெண் எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் பகுதியை நோக்கி ராகுல் காந்தி Flying kiss கொடுத்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகரிடம் ராகுல் காந்தி மீது பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் கொடுத்துள்ளனர்.







