பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் கருப்பு முருகானந்தம். இவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து, கட்சிப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் M.முருகானந்தம் அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கட்சியின் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




