தமிழக அரசின் சொத்து வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சொத்து வரி,தொழில் வரி,தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை உயர்த்திள்ளது.இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள்னர்.இதனை கண்டித்து ஆங்காங்கே பொதுமக்கள்.அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் காவல்துறையினர் கூறியதை ஏற்க மறுத்த அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் போராட்டகாரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால்
அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-வேந்தன்