ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பந்துவீச்சாளர் பட்டியலில் இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
36 வயதான அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட் எடுத்தார். இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதன்படி, கடந்த வாரம் பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும், பும்ரா 4வது இடத்திலும், ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிக்க: ஜாஸ்பிரித் பும்ராவும், தீரா காயமும்!
https://twitter.com/ICC/status/1630843210485448704?t=WR_Hy6CKqi9Q2hp8wHtSbg&s=08
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா முதல் இரு இடங்களில் உள்ளனர்.
-ம.பவித்ரா








