இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் தொடக்க நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா தேசியக்கொடியை ஏந்தி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொங்க உள்ளது. வருகிற 28-ம் தேதி தொடங்கும் போட்டிகள் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா சார்பில் 108 வீரர்கள் மற்றும் 107 வீராங்கனைகள் என 215 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் 10 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தேசியக்கொடியை ஏந்தி செல்லும் கௌரவம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளையாட்டில் நீரஜ் சோப்ரா தான் தேசியக் கொடியை ஏந்தி சென்றார். அதன் பின்னர் 2018 ஆசிய விளையாட்டு மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்மிக் ஆகிய போட்டிகளில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
120 ஆண்டுகள் ஒலிம்பிக் வரலாற்றில் தடகளப்போட்டியில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்ததற்காக நீரஜ் சோப்ராவை கௌரவிக்கும் வகையில் அவர் தேசிக்கொடியை ஏந்தி செல்வார் என சொல்ப்படுகிறது. அதேநேரத்தில், காமன்வெல்த் போட்டியின் தொடக்க விழாவில் இவர் பங்கேற்பதை பொறுத்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்