உலகளாவிய சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், துறைமுகக் கட்டணங்கள், சுங்க வரிகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நில்கையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




