முக்கியச் செய்திகள் இந்தியா

வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.2,000ஐத் தாண்டியது

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை 266 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சி அளித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏற்ற இறக்கத்தை வைத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாதத்திற்கு தலா இரு முறை சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை எட்டியுள்ளன.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன. டெல்லியில் நேற்று வரை 1,734 ரூபாயாக இருந்த சிலிண்டர், இன்று 266 ரூபாய் உயர்த்தி 2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.2133 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், தேநீர், உணவகம் மற்றும் பேக்கரி நடத்துவோர் கவலை அடைந்துள்ளனர். தேநீர் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனினும் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தீரன் சின்னமலை நினைவு தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

Saravana Kumar

வருகிறது புதிய கொரோனா தடுப்பூசி

Saravana Kumar

கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்

Saravana Kumar