முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரு சில நீதிபதிகளை, வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளை பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜாஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த்தை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணியை, கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரை பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இதேபோல், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் கரேலை மாற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பெயர் கொலிஜியம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரசில் மேலும் ஒரு முக்கிய தலைவர் அதிருப்தி- வழிகாட்டுதல் குழுவிலிருந்து விலகல்

Web Editor

கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பா செல்வதில் சிக்கல்?

Gayathri Venkatesan

இருளர் சமூக மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆட்சியர் ஆர்த்தி

Jeba Arul Robinson