விருதுநகர் மாவட்டம் நெல்லை சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள்,ஆசிரியர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனா். அப்போது, நெல்லை டிவிஎஸ் நகரில் உள்ள சாலையில் டீசல் இல்லாமல் ரயில் இஞ்சினுக்கான பாகங்களை ஏற்றி வந்த லாரியின் பின்பக்கத்தில் கல்லூரி பேருந்து மோதியது. இதில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் முனுசாமி, கிளீனர் வீர செல்வம் மற்றும் மாணவிகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். பின்னா் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டதில், கல்லூரி வாகனம் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதால் அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அதே வேளையில், நான்கு வழி சாலையில் போதிய விளக்குகள் இல்லாமல் இருந்ததும், மேலும் டீசல் இல்லாமல் நிறுத்தப்பட்ட லாரியில் சிவப்பு விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டிந்ததும், விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
TNL_COLLEGE BUS ACCIDENT
VISUAL IN ASSIGNMENT WHATS APP
VISUAL SENT
கா. ரூபி







