கோவையில் மத்திய அரசுக்கு சொந்தமான சிஆர்பிஎப் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்ற வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்து
கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம் தொப்பம்பட்டியை அடுத்த குருடம்பாளையத்தில் மத்திய அரசின் கட்டுபாட்டின் கீழ் ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரி உள்ளது.இங்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த பெருமாள்குளத்தை சேர்ந்த ஜெகன்(32) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.ஜெகன் கடந்த 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஜெகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. ஆனால் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருடன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஜெகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் இரண்டாவதாக திருமணமாகியுள்ளது.இந்நிலையில் குடும்ப பிரச்சினையால் மன அழுத்தத்தில் இருந்த ஜெகன் நேற்று பணியின்போது தன்னைதானே துப்பாக்கியில் இருமுறை சுட்டுக்கொண்டுள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் போலீசார் ஜெகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பதற்கு முன்னர் ஜெகன் தனது பெற்றோர் மற்றும் அண்ணன் ஆக்யோருக்கு வாட்ஸப் மூலமாக தகவல் அனுப்பி உள்ளார்.அதில் அதில் குடும்பத்தை பார்த்து கொள்ளுமாறும், தற்கொலை செய்து கொள்வதற்கு மன்னியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஜெகனின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேந்தன்