25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் சினிமா

தனுஷ்-50 படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும்? -ரசிகர்கள் உற்சாகம்!…

தனுஷ்-50 படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே தற்போது தனுஷ் தனது 50-வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், ஜெயராம் காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மேலும் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

’பா பாண்டி’ திரைப்படத்திற்கு பின்னர் தனுஷ் இந்த படத்தை இயக்குவதோடு சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார். மேலும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் இந்த படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்திப் கிஷான் ஆகிய இருவர் எனவும், இவர்கள் தனுஷின் சகோதரர்களாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை பகுதியில் படப்பிடிப்பிற்காகப் படக்குழு லொக்கேஷன் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

Jeba Arul Robinson

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு -போலீசார் விசாரணை…

Web Editor

பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சிபிஎம் டி.கே.ரெங்கராஜனை விளாசிய முரசொலி நாளிதழ்..!

Web Editor