புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா – தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை…

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றம் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கவுரவித்தார். தொழிலாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகளையும் பிரதமர் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில் , நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் வரலாற்று சிறப்புமிக்க திறப்புவிழா இது. நமது புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் இந்த திறப்பு விழா நன்னாளில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வோர் இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது.

https://twitter.com/rajbhavan_tn/status/1662672120147476480?s=20

மேலும் புனித செங்கோலை, அதிகார மாற்ற கலாசாரம்&சுதந்திரத்தின் அடையாளமாகவும் நியாயமான ஆளுகையை தொடர்ந்து நினைவூட்டவும் நாடாளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது, ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இதற்காக மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.