தகவல் தொழில்நுட்ப வல்லுநர் செயற்கை நுண்ணறிவு செயலியின் உதவியுடன் விதவிதமான ஆடை வடிவமைப்பில் ஒரு பெண்ணை உருவாக்கி அசத்தியுள்ளார்.
AI (செயற்கை நுண்ணறிவு) என்பது ஒரு கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும், இது பொதுவாக ஒரு மனிதன் யோசித்து முடிவெடுக்க வேண்டிய சில பணிகளைச் செய்யும் திறன் கொண்டது. இதை செய்ய, பெரிய அளவிலான தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் வடிவங்களை அங்கீகரிப்பதன் மூலமும் AIகள் “கற்றுக்கொள்கின்றன”. வன்பொருள் மற்றும் மென்பொருளை இணைப்பதன் மூலம், பெரிய தரவுத் தொகுப்புகளில் உள்ள வடிவங்களை இந்த AI செயலி கற்றுக்கொண்டு மனிதர்களுக்கு கடினமான அல்லது சாத்தியமில்லாத பிரச்சனைகளையும் AIகள் தீர்க்கிறது.
AI-உருவாக்கப்பட்ட படங்கள் என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு மனித கலைஞரின் படைப்பு அல்லாத ஒரு படத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை படம் “AI-உருவாக்கப்பட்ட படம்” என்று அழைக்கப்படுகிறது. அத்தகய AI படங்கள் யதார்த்தமாகவோ அல்லது சுருக்கமாகவோ இருக்கலாம் மேலும் ஒரு குறிப்பிட்ட தீம் அல்லது செய்தியையும் தெரிவிக்கலாம்.
AI படங்களுக்கு பல சாத்தியமான பயன்பாடுகள் உள்ளன. ஒருபுறம், உங்கள் சொந்த புகைப்படங்களை மேம்படுத்த அவற்றைப் பயன்படுத்தலாம். புகைப்படத்தை பகுப்பாய்வு செய்து அதை மேம்படுத்தும் அல்காரிதத்தைப் பயன்படுத்தி இது செய்யப்படுகிறது. உதாரணமாக, எதீத எதிர் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள சிவப்பு கண்கள் தானாகவே சரிசெய்யப்படும். படத்தின் கூர்மையை மேம்படுத்தப்படலாம்.
மேலும் AI மூலம் முற்றிலும் புதிய படங்களையும் உருவாக்க முடியும். இந்த நோக்கத்திற்காக, பல்வேறு கூறுகளிலிருந்து புதிய படங்களை உருவாக்கும் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, புதிய கலைப்படைப்புகளை உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் படத்தை மாதிறியாக கெண்டு புதிய படங்களை உருவாக்கலாம்.
அப்படி உறுவாக்கப்பட்ட பல படக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒருவர் உருவாக்கிய AI படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிரது.
இது தொடர்பாக செல்வக்குமார் என்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர் தனது முகநூல் பதிவில், ’சில வாரங்களுக்கு முன்பு செயற்கை அறிவுச் செயலியின் உதவியுடன் ஒரு பெண்ணை (பச்சை நிறப் புடவையில்) உருவாக்கினேன். தற்போது அப்பெண்ணிற்கு மிகச்சிறிய அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். அதே பெண்ணை விதம் விதமான உடைகளில் காண முடியுமா என்று சிலர் கேட்டிருந்தார்கள். எனவே என்னால் இயன்ற அளவு அதே பெண்ணிற்கு விதம் விதமாக ஆடைகள் உருவாக்கி அணிவித்து அழகு பார்த்திருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கள்’ என்று சில AI மூலம் முற்றிலும் உருவாக்கப்பட்ட படங்களுடன் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.








