மதுரை அழகர்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 1,200 அடி நீளத்திற்கு தேங்காய் நார் தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவில் வளாகத்தை கடும் வெப்பத்தில் இருந்து பாதுக்காகவும், பக்தர்களின் பாதங்களை வெயிலிலிருந்து பாதுகாக்கும் விதமாகவும் தேங்காய் தரை விரிக்கப்பட்டுள்ளது.
அழகர்கோவில் பேருந்து நிலையம் முதல் கோவில் வரையிலும், பக்தர்கள் செல்லும் பிற இடங்கள் என 1,200 அடி நீளத்திற்கு தேங்காய் நார் தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. அழகர்கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தேங்காய் நார் தரை விரிப்பிற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சில நாட்களில் சித்திரை திருவிழா தொடங்க உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இந்த தரை விரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
—சௌம்யா.மோ






