கோப்ரா திரைப்படம்; ரசிகர்கள் அமோக ஆதரவு

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது.  ‘கோப்ரா’ படம் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாகி…

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. 

‘கோப்ரா’ படம் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீசாகி உள்ளது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சியான் விக்ரம் பல கெட்டப்கள் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படங்கள் போன்று, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர். ரஹ்மானின் இசை வேற லெவலில் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோப்ரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல வரவேற்பு பெற்றுள்ளது. திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நன்றாக நடித்துள்ளார் என ரசிகர்கள் தெரிவித்தனர். திரைப்படத்தில் ஏஆர்ரகுமானின் இசை நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்தனர்.கோப்ரா திரைப்படம் மூன்று நேரம் மணி நேரம் திரைப்படம் இருப்பதால் நேரம் போகவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

இது ஒரு குடும்ப படமாக இருப்பதால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். நடிகர் விக்ரம் திரைப்படத்தில் எட்டு வேடங்களில் நடித்துள்ளார் . எட்டு வேடங்களும் வெவ்வேறு விதமான வேடங்களில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார் இதனை பார்க்க ரசிகர்கள் மிக அருமையாக உள்ளது என தெரிவித்தனர்.

நடிகர் விக்ரம் மூன்று வருடங்கள் கழித்து திரையில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.