குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,…

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள் ள ஐஏஎஸ் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தற்போதைய கொள் முதல் பணிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அப்போது, குறுவை பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாக வும், இதில், கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொள்முதல் பணிகள் விரைவாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணியை, அனுப்பிவைத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.