சேலம் ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது: 2 பேருக்கு வலைவீச்சு

ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 21ஆம் தேதி சேலம் கிச்சிப்பாளையம்…

ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 21ஆம் தேதி சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி பாதுஷா மைதீன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த சக்திபிரபு மற்றும் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மணிகண்டன், வசந்தகுமார் ஆகிய நான்கு பேரினை கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இக்கொலை சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இக்கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தப்பியோடிய நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.