முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19.05.2021 அன்று கொரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றின் வேகமானது, கடந்த முதல் அலையை விட இந்த இரண்டாவது அலையில் மிக கடுமையாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது என்றும், அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு உதவிட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது, ஒருங்கிணைப்புக் குழுவிற்கு கீழ்க்கண்ட அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

வணிவரித் துறை கூடுதல் ஆணையர் லஷ்மிபிரியா ஐஏஎஸ், பொதுத்துறை (சட்டம் ஒழுங்கு) அரசு துணைச் செயலாளர் எஸ்.பி.அம்ரித் ஐஏஎஸ், தமிழக ஊராக புத்தாக்கத்திட்ட மாவட்ட வருவாய் அலுவலர், எஸ். சாந்த குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் எம்.கண்ணன் ஆகிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை ஒழிக்க மேற்கொள்ளும் பணிகளுடன் சேர்த்து, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து சமூக பங்களிப்பு நிதியைப் பெற்று, அதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்.

மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் தனது பணிகளை மேற்கொள்ளும். தனியார் தொண்டு நிறுவனங்கள் tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மாநில ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

முட்டை விலை 35 காசுகள் உயர்வு: இன்னும் உயருமாம்!

Karthick

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளிக்கும் இந்தியாவுக்கு நன்றி- WHO!

Jayapriya

ஸ்பெயினை தாக்கிய கடும் பனிப்புயலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

Saravana