மதுரையை சேர்ந்த பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரனுக்கு ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது அறிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரன் மதுரையை சேர்ந்தவர். இவர் போட்டோகிராபி துறையில் பல அசத்தல்களை நிகழ்த்தி வருகிறார். மேலும் பல ஆவணப் படங்களையும் எடுத்து வருகிறார். இவர் எடுத்துள்ள வனவிலங்குகள் சார்ந்த பல புகைப்படங்கள் ஏராளமான விருதுகளை தட்டிச்சென்றுள்ளன. வன விலங்குகளின் வாழ்வாதாரம் தொடர்பாக அவர் எடுத்துள்ள பல புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இவர் பெற்ற விருதுகளின் வரிசையில் முக்கியமான விருதுகளின் வரிசையில், 2007ம் ஆண்டு, லண்டன் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது கிடைத்தது. மேலும், மற்றொரு ஐகானிக் புகைப்படமான கங்கை ஆற்றின் கரையோரம் காயப் போடப்பட்டிருந்த சேலைகளின் புகைப்படமானது வைலானது. அதை அவர் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படத்திற்கான போட்டிக்கு அனுப்பி வைத்தார். இந்த போட்டியில் உலகெங்குமிருந்து வந்திருந்த 1000 புகைப்படங்களில் செந்தில்குமரனுடைய புகைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வனவிலங்கு சார்பாக அவர் எடுத்த புகைப்படத்திற்கு தற்போது ஒரு விருது கிடைந்துள்ளது. வேர்ல்டு பிரஸ் போட்டோ என்ற அமைப்பின் பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான விருதை இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதை தமிழர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.
மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திரு. செந்தில்குமரன் அவர்கள் @WorldPressPhoto அமைப்பின் #WPPh2022 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்!
மனித – வன விலங்கு மோதலை வெளிக்கொண்டு வரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை! pic.twitter.com/ymp6mBAZXs
— M.K.Stalin (@mkstalin) March 26, 2022
மேலும், “மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திரு. செந்தில்குமரன் ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ என்ற அமைப்பின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள் என்றும் மனித – வன விலங்கு மோதலை வெளிக்கொண்டு வரும் இவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை”, என ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், 130 நாடுகளில் இருந்து 4,800 புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற ஒரு போட்டியில் தமிழர் ஒருவர் சாதித்திருக்கிறார் என பலரும் இவரை பாராட்டி வருகிறார்.








