வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை என்று போற்றப்பட்ட வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘திருப்புமுனை மனிதர்’ என்றும் ‘இந்தியப் பொதுத் துறை…

இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை என்று போற்றப்பட்ட
வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘திருப்புமுனை மனிதர்’ என்றும் ‘இந்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை’ என்றும் போற்றப்பட்ட பத்மவிபூஷன் வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வயதுமூப்பின் காரணமாக நேற்று (ஜூன் 26) மறைவுற்றார் என்றறிந்து மிகவும் வருந்தினேன். பாரத மிகுமின் நிறுவனம் (BHEL), இந்திய எஃகு ஆணையம் (SAIL), மாருதி உத்யோக் என பல நிறுவனங்களிலும் அவர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் இந்திய மக்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்.

பல்வேறு பிரதமர்களுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய பழுத்த அனுபவத்துக்குச் சொந்தக்காரரான திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் மற்றும் தொழில்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.