முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைத்திட புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நீர்வளத்துறை ஆய்வு கூட்டத்தில், அத்துறையின் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த, அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு தடுப்பணைகளை உருவாக்கிட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா? சபாநாயகர் விளக்கம்

Ezhilarasan

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!

Jeba Arul Robinson

இந்தோ திபெத் போலீஸ் படையில் முதன்முறையாக பெண்கள் நியமனம்

Halley karthi