முக்கியச் செய்திகள் தமிழகம்

நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும்  திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முப்பொழுதும் அன்னதான திட்டம் மூலம் காலை கோவில் நடை திறந்தது முதல் இரவு கோவில் நடை அடைக்கும் வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 3,000 பேருக்கு உணவு வழங்கவும், திருவிழா நாட்களில் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தினமும் 7,800 பக்தர்கள் பயன்பெறுவார்கள் எனவும், ஒரு மாதத்திற்கு 9.45 கோடி செலவு ஆகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து இந்த நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பசியின்றி செல்வதற்காக முழு நேர அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றார். ஊரடங்கு நாட்கள் தவிர்த்து கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஏரியில் தொலைந்த ஐபோன்: ஒரு வருடம் கழித்துக் கிடைத்த அதிசயம்

Halley karthi

மேற்கு வங்க மாநிலத்தை குஜராத் ஆக மாற அனுமதிக்க மாட்டோம்: மம்தா பானர்ஜி

Halley karthi

3-வது அலையை கட்டுப்படுத்த மருத்துவ கட்டமைப்புகள் தயார்: மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan