பேராயர் எஸ்ரா சற்குணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து

பேராயர் எஸ்றா சற்குணத்தின் 83வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறையியல் கல்லூரி வளாகத்தில், பேராயர் எஸ்றா சற்குணத்தின் 83வது பிறந்தநாள்…

பேராயர் எஸ்றா சற்குணத்தின் 83வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறையியல் கல்லூரி வளாகத்தில், பேராயர் எஸ்றா சற்குணத்தின் 83வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று எஸ்றா சற்குணத்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சிறுபான்மையினர் நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஜிபி குழு தலைவர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.