அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். அதிமுகவில் நீண்ட காலம் அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன், 1991-96 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன். அதிமுகவில் நீண்ட காலம் அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன், 1991-96 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தலைவர் இவர்தான்.

இவருக்கு, கடந்த தின தினங்களுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார்.

அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அவரது உடல்நிலை சீரடையவில்லை என்றும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , அவர் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.