காவிரி-குண்டாறு திட்டத்திற்கு நாளை அடிக்கல்!

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி…

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் தேவையான காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதற்கட்ட பணிகளையும், மற்றும் விரிவாக்க பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வளம் பெற்றிடும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.