சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்! கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடு!

அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய தமிழகத்தை சேர்ந்தமுத்தமிழ்ச்செல்வி கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி (34). இவர் கடந்த 24ம் தேதி அண்டார்டிகா சிகரத்தின்…

அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய தமிழகத்தை சேர்ந்த
முத்தமிழ்ச்செல்வி கீழே வர முடியாமல் தவிப்பதாக வீடியோ வெளியீடுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி (34). இவர் கடந்த 24ம் தேதி அண்டார்டிகா சிகரத்தின் 4,892 மீட்டர் (16,050 அடி) உயரமுள்ள மலையின் உச்சியை அடைந்தார். இதனால் அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண்ணாக சாதனை படைத்துள்ளார் முத்தமிழ்ச்செல்வி.

தற்போது அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் கீழே வர முடியாமல் தவிப்பதாகவும் அங்கு உணவு உள்ளிட்ட தேவைகளை பெற முடியாமல் கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், கடுமையான சவால்களுக்கு மத்தியில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வர முடியாமல் தவிப்பதாகவும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.