முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு- அரசாணை வெளியீடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றங்களுக்கான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிர்வாகக் குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுனர்கள், தமிழக அரசின் மூத்த செயலாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இந்தக் குழு தயாரிக்க உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதால், முதல்-அமைச்சர் தலைமையில் அவ்வபோது ஆலோசனைகள் மேற்கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டங்களை இந்த குழு நிறைவேற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாணவர்கள் கல்வி தொடர்பான பிரச்னைகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

EZHILARASAN D

”இளையராஜா எனும் நான்”- ராஜ்யசபாவில் ஒலித்த இசை ராஜாவின் குரல்

Web Editor

இந்தோனேசியாவில் இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு – பாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

NAMBIRAJAN