தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, வருகின்ற 10ஆம் தேதி தமிழக முழுவதும் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த சூழலில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாள்தோறும் காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் தற்போது காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வரும் ஒரு பெண் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் ஒரு படுக்கையில் இரண்டு குழந்தைகளை படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதும், ஏராளமான குழந்தைகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது போன்ற வீடியோவும், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி போன்ற மருந்து பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதியிலே கிடப்பது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைச் செய்தி : சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது – அன்புமணி ராமதாஸ்
மேலும் இது போன்ற அரசு மருத்துவமனையின் அவல நிலையால் நோய் தொற்று ஏற்படும் அபாய சூழல் நிலவி வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.