“கொத்த அடிமை அரசாக இருந்த அதிமுக அரசு நீட்டுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கோவை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் உறையாற்றினார். அப்போது, பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், உள்ளாட்சியிலும் தொடரும் நல்ல ஆட்சி என்ற முழக்கத்தோடு இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலைக் நாம் சந்திக்கின்றோம் எனவும், 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்தவர்களை புறந்தள்ளி, திமுகவை மக்கள் தேர்ந்தெடுத்து இருப்பதாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆறு மாத காலத்தில் 5 ஆண்டுகால ஆட்சி போல பல்வேறு திட்டங்களைக் செய்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், உழவர் நாராயண சாமி நாயுடு அவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு தான் நிறைவேற்றியதாகவும், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திடங்கள வழங்கிய அரசு தான் இந்த திமுக அரசு என குறிப்பிட்டு பேசினார். மேலும், “கலைஞர் வாழ்ந்த ஊர் தான், இந்த கோவை. எனவே, அங்கு வேளாண் பல்கலைக்கழகம், நிறுவினோம்” என குறிப்பிட்டார். அதேபோல, கொங்கு வேளாளர் கவுண்டர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்தது திமுக அரசு தான் எனவும், கோவையில் இந்த ஆறு மாத காலத்தில் 24,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல, கோவையில் 200 கோடி ரூபாய் செலவில் செம்மொழி பூங்கா அமைய இப்பதகாவும், இந்த 8 மாதகாலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்த ஒரே அரசு திமுக தான் எனவும், இது உங்களுக்கான அரசு, ஒரு இனத்திற்கான அரசு என அவர் குறிப்பிட்டார். மேலும், நீண்ட காலமாக முடிக்கபடாமல் இருக்கும் பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசிடம் பேராடி பல்வேறு திட்டங்களை பெற்று வருவதாகவும், வருகின்ற 8-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வலுவாக நீட்டுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுவோம் என பேசினார்.
எல்லாவற்றுக்கு முந்தி கொண்டு பதில் சொல்லுபவர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் என சாடிய முதலமைச்சர், கொத்த அடிமை அரசாக இருந்த அதிமுக அரசு நீட்டுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வைக் கொண்டு வந்தது அன்றைய பாஜக அரசு தான் என்று குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் மசோதவைக் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம் எனவும், மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அமல்படுத்த விடமாட்டோம் என பேசினார். இறுதியாக இந்த கூட்டத்தைக் மிக சிறப்பாக ஏற்படுத்தி வெற்றி அடைய செய்த செந்தில்பாலாஜிக்கு எனது பாராட்டுகள் என கூறி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.