முக்கியச் செய்திகள் குற்றம்

10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேர் கைது!

ஹரியானாவில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வைராக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் கடந்த மே மாதம் 24ம் தேதி சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒருவர் சிறுமியை கடத்தி அருகில் இருந்த பள்ளிக்கு கொண்டு சென்றுள்ளார். ஊரடங்கினால் பள்ளி நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு ஏற்கெனவே காத்திருந்த 8 பேருடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அதில் சிலர் இந்த வீடியோவை பிற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்ததால் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாகியுள்ளது.

ஆனால் பயத்தின் காரணமாக இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து சிறுமியின் பெற்றோருக்கு இந்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்த பெற்றோர் காவல் நிலையத்தில் ஜூன் 9ம் தேதி புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர்களில் 5 பேர் சிறுமியின் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவினர்கள் மேலும் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரில் 5 பேர் 10 முதல் 12 வயதிற்குள் உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

கூகுள் மேப் சேவைக்கு போட்டியாக களமிறங்கும் மேப் மை இந்தியா!

Jayapriya

அதிபரின் பதிவை நீக்கியதால், நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை !

Vandhana

தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

Karthick