முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!


தமிழ்நாட்டில் இன்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் குறைக்கும் வகையில் மே 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதிலிருந்து தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று ஒரே நாளில் 15,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,24,597 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இன்று மட்டும் 29,243 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 21,20,889 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கையும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் 378 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,906 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,74,802 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 2,056 பேரும், ஈரோட்டில் 1365, சென்னையில் 1094 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 916 பேருக்கு பாதிப்பு உறுதியானது. மற்ற மாவட்டங்களில் 9,00க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.

Advertisement:

Related posts

831 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப் பட்டுள்ளது : மத்திய ரயில்வே

Karthick

மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: தமிழக அரசு

Karthick

கிராம சபை கூட்டத்தை அரசு கூட்டாததாலேயே, திமுக கூட்டுகிறது! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Nandhakumar