11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவர் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் அந்த மாணவனை பள்ளியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டும், மிரட்டியும் உள்ளனர்.

 

அதனை அறிந்த மாணவரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் நிலைய போலீசார் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற் கட்ட விசாரணையில் 12 ஆம் படித்து வரும் 3 மாணவர்கள் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.

அதனால் அந்த மூன்று மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.