உணவில் ஈ கிடந்ததால் ஏற்பட்ட மோதலையடுத்து, பாமக கட்சியினர் மற்றும் காபி ஷாப் ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த சிலாவட்டும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி ஷாப் உள்ளது. இந்த கடைக்கு பாமகவினர் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் சாப்பிட்ட உணவில் ஈ இருந்துள்ளது. இதுகுறித்து கடை ஊழியர்களிடம் பாமகவினர் கேட்டபோது, கடை ஊழியர்களுக்கும், பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், பாமக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கணபதி , பாமக முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், நடராஜன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோன்று காபி ஷாப் ஊழியர்கள் முருகானந்தம் , பிரபு , கோபி, கார்த்திக் உள்பட 25 நபர்கள் மீது மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை.
-ம.பவித்ரா







