தொழில்நுட்ப கோளாறு – UGC NET தேர்வு பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக UGC NET 2022 தேர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரையில் புதிய அட்டவணை வெளியிடப்படும் என NTA அறிவித்துள்ளது.   இந்தியாவில் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும்…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக UGC NET 2022 தேர்வு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரையில் புதிய அட்டவணை வெளியிடப்படும் என NTA அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நெட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றனர்.

 

இந்த தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் பொது அறிவு குறித்த 50 வினாக்கள் இடம்பெறும். அதே போல 2ம் தாளில் பாடம் சார்ந்த 100 கேள்விகள் இடம்பெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கி வருவதால் இந்த வருடம் யுஜிசி – நெட் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

 

கடந்த மே மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. முதுநிலை படித்த மாணவர்களுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் முதுநிலை கல்வியோடு தொடர்புடைய பாடப் பிரிவை நெட் தேர்வர்கள் தேர்தெடுத்து விண்ணப்பிப்பது அவசியம். இந்த யுஜிசி நெட் தேர்வு கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NAT) தெரிவித்திருந்தது.

 

இந்த ஆண்டு NTA 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் ஆகிய 2 வருட தேர்வுகளை ஒருங்கே நடத்த முடிவு செய்யப்பட்டு ஜூலை 9 மற்றும் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,
‘தொழில்நுட்பச் சிக்கல்’ காரணமாக UGC NET 2022 தேர்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

விரைவில் ugcnet.nta.nic.in இல் திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்படும் என்றும் UGC NET 2022: ஜூலை 9 அன்று தொழில்நுட்பச் சிக்கல்களால் UGC NET தேர்வு பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட தேதிகள் மற்றும் அட்மிட் கார்டுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

 

இது குறித்து தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, 2022 ஜூலை 9-ல் ஷிப்ட்-1 அன்று தொழில்நுட்பச் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வை தேசிய தேர்வு முகமை மறுஅட்டவணை செய்யும். UGC NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 இணைக்கப்பட்ட சுழற்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சில தொழில்நுட்பப் பிழை காரணமாக ஷிப்ட் 1 இல் பல மையங்களில் UGC NET தேர்வு பாதிக்கப்பட்டது.

இதனால் தேர்வை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட நுழைவுச் சீட்டுடன், மாற்றியமைக்கப்பட்ட தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதி, அதிகாரப்பூர்வ இணையதளமான- nta.ac.in இல் விரைவில் பதிவேற்றப்படும். தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். பரீட்சை தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு NTA இணையதளமான ugcnet.nta.nic.in-ஐ விண்ணப்பதாரர்கள் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.