கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், அடியாட்கள் நுழைந்ததால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரிக்குத் தினமும் பேருந்தில் பயணம் செய்து பயின்று வருகின்றனர். அதன்படி இன்று செய்யாறில் கல்லூரி முடித்து ஆரணிக்குப் பேருந்தில் பயணம் செய்யும்போது கல்லூரி மாணவர்களிடையே பேருந்தில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதில் சதீஷ் சென்ற மாணவன் தன்னை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக சேவூர்
பகுதியைச் சேர்ந்த அவனுடைய சகோதரருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். சதீஷின் அண்ணன் அடியார்கள் 10 பேரை அழைத்து கொண்டு வந்து ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே செய்யாற்றிலிருந்து வரும் கல்லூரி மாணவர்கள் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை சதீஷின் அண்ணன் மற்றும் அடியார்கள் வழிமறித்து சதீஷை தாக்கிய கல்லூரி மாணவர்களைத் தாக்கி உள்ளனர்.
பேருந்திலிருந்த கல்லூரி மாணவர்கள் இதைத் தடுத்துள்ளனர், அப்போது அடியார்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் அதிகமாகி உள்ளது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி கிராமிய போலீசார் கல்லூரி மாணவர்களை மடக்கிப் பிடித்து சண்டையைத் தடுத்து நிறுத்தினர்.போலீசார் வந்ததைக் கண்டு மோதலில் ஈடுபட்ட அடியார்கள் அனைவரும் தப்பி ஓடியதாகத் தெரிகிறது. மோதலுக்குக் காரணமான இருந்த கல்லூரி மாணவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அடியார்கள் கலந்து கொண்டு சண்டையில் ஈடுபட்டதால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.







